அத்திப்பழம் எளிதில் ஜீரணமாகும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு கிடைக்கிறது.
அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம்.
உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது.
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து 3% கால்சியம் நமக்கு கிடைக்கிறது. இதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வராமல் தடுக்கலாம். ஒரு உலர் அத்தி பழத்தில் 46 கலோரிகள் இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படும்.
தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் 5 கிராம் அளவிலான நார் சத்து நம் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் மலச்சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நமது உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகி பொட்டாசியத்தின் அளவு குறைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை தடுக்க உலர்ந்த அத்திப்பழம் உதவுகிறது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
