மௌன விரதம் - சுகந்தீனா கவிதை

விரதத்தினால்
விலகி நின்றேன்
எதிலும் வீழ்ந்து
விடாமலிருக்க...!

உன்னைக் கண்
கண்டது முதல்...!

மௌனவிரதம்
கூட சாத்தியப்
படவில்லை
எனக்கு...!

எந்நேரமும்
எதையேனும்
உளறிக்
கொண்டே
இருக்கிறது 
மனம்...!

வேறேதேனும்
விரதமுண்டோ
உளறலிலிருந்து
விடியல் காண...!

மௌனமாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
தொலைத்த
மௌனத்தை...!

✍️ கவிதாயினி
       *சுகந்தீனா*