எது ஆயுதம்? கிராத்தூரான் கவிதை


அரவணைக்க நினைப்பவர்க்கு அன்பே ஆயுதம்
ஆபத்தில் இருப்பவர்க்கு அறிவே ஆயுதம்
இதயத்தின் வலிமைக்கு இசை நல்ல ஆயுதம்
ஈரடித் திருக்குறள் வாழ்க்கைக்கு ஆயுதம்.

உயர நினைத்தால் உழைப்பே ஆயுதம்
ஊரார் பலருக்குச் சொல்லே ஆயுதம்
எழுதத் தெரிந்தவர்க்கு எழுத்தே ஆயுதம்
ஏகாந்தம் மறந்திட புத்தகம் ஆயுதம்.

ஐம்பூதங்களும் இயற்கையின் ஆயுதம்
ஒற்றுமை என்பது தேசத்தின் ஆயுதம்
ஓவியனுக்கோ தூரிகை ஆயுதம்
ஔவையைப் போன்றோர்க்குத் தமிழே ஆயுதம்.

எது வந்து துணைக்குமோ அது தான் ஆயுதம்
எது வந்து காக்குமோ அது தான் ஆயுதம்
உதவுகின்ற நேரத்தில் ஊசி கூட ஆயுதம்
உதவவில்லை என்றால்...
உதவவில்லையென்றால்
ஏவுகணை என்ன ஆயுதம்?