நிலமகள் என்றீர்கள்
நினைவெல்லாம் நீங்களாய்
மாறினேன் நான்!
பூமித்தாய் என்றீர்கள்
பூரித்தேன் பெற்றதாயாக!
கலப்பையால் என்மேனி
கிளறி கீறினீர்கள்
சிலிர்த்தேசிரித்தேன் நான்!
தூவியவிதைகளெல்லாம்
துரிதமாய் என் அகம் கீறி
புறம்வந்தபோதும் என்றும் துவளவில்லை நான்!
களையெடுத்தகணமெலாம்
மேலுக்கு வலித்ததில்லை!
மயிலிறகு வருடலாய் மயங்கியேப் போனேன்!
காலணிகளைந்என்மேல்
நடந்து சென்ற உம் பண்புக்காய்
கர்வப்பட்டேனே ஒழிய
கலங்கி நின்றதில்லை!
இன்றோ ................... !!என் அடிமடி நீங்க
சுரண்டிமணலளும்போது
உயிருடன்கருச்சிதைவு
செய்தீர்கள் !வலி......
என்உயிர்வரைபோனது!
அடியாழம் வரை குழாய் அனுப்பி உயிர் நீரை
உறிஞ்சினீர்கள் வலி....
என்னிதயம்வரைபோனது!
எரிவாயுதனை நகர்த்த
எண்ணற்ற குழாய்கள்
மூச்சுவிடல் திணறிட வலி நுரையீரல் வரை போனது!
மீத்தேன் நாடகத்தில்
மிச்சமிருக்கும் குருதி
சுண்டிப்போனதால்
மூளை. உருகிய வலி
மேனிமுழுதும் வெடித்தது!
என்னில் வேர்பரப்பி
தண்நிழல் தந்த மரங்களை
தன்னுணர்வின்றி வெட்டியே
சாய்த்தீர்கள் .......
இதோ கடைசி உயிர்வளி
இரவலாகவாவது கிடைக்க
வழியுள்ளதா என வலியுடன்
விழிவழி உயிர் செல்லநான்
வாய்பிளந்துக் காத்திருக்க!
எப்போது உணர்வீர்கள்
என் வலி?
எப்போது காட்டுவீர்கள் எனக்கு புது வழி?
பதில் சொல்ல மனமுண்டா
பகல்வேடம் களைந்து வர?
🌹🌹வத்சலா🌹🌹

